மல்வத்தையில் ஆயுள்வேத வைத்தியசாலை ஆளுநரால் திறந்து வைப்பு.

( வி.ரி.சகாதேவராஜா)  மல்வத்தையில் ஆயுள்வேத வைத்தியசாலை நேற்று முன்தினம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
 மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண ஆயுள்வேத திணைக்களம்  ஏறக்குறைய 14,000,000. (ஒருகோடி நாட்பது லட்சம்) ரூபாவை ஒதுக்கீடு செய்து மல்வத்தை ஆயுர்வேத மத்திய மருந்தகம் அமைக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை இம் மருந்தகம் ஆளுநர்  செந்தில் தொண்டமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.முரளீதரன் தலைமையில் இத்திறப்பு விழா இடம்பெற்றது.
முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளரும் சு.கட்சி அமைப்பாளருமான வெ.ஜெயச்சந்திரன் மல்வத்தை மக்கள் ஒன்றிய தலைவர் பொன்.நடராஜா உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.