(அ . அச்சுதன்) அகில இலங்கை அழகியல் நடனப் போட்டியில் தேசிய மட்டத்தில் திருகோணமலை கப்பல்துறை சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள் தப்பு நடனத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
அநுராதபுர மத்தியக் கல்லூரியில் இடம் பெற்ற தேசிய மட்ட அழகியல் நடனத்தில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களை நெறிப்படுத்திய நடன ஆசிரியை திருமதி. யசோதினி குகாந்தன் இவ் நடனத்தின் பாடல் ஆக்கம், இசையமைப்பு ஆசிரியர் இதயநேசன் , வாத்தியங்களை இசைத்தவர் லோகிசன் மற்றும் வித்தியாலய அதிபர் திருமதி. தவவாசுகி ரமணன் ஆகியோரை கல்விச் சமூகம் பாராட்டியுள்ளது