( வி.ரி.சகாதேவராஜா) தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 100 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வும் சிங்கள பாரம்பரிய உணவு முறை சார்ந்த கண்காட்சியும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.
இந் நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் மிக சிறப்பாக முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ஜெ. மதன், வைத்தியசாலை கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, வைத்தியசாலை தாதிய பரிபாலகர் .என். சசிதரன், தாதிய பரிபாலகி திருமதி. எல். சுஜேந்திரன், வைத்தியசாலை நிர்வாக உத்தியோகத்தர் . தோமஸ் தேவஅருள், பிரதான சுகாதார முகாமைத்துவ உதவியாளர் திருமதி. எஸ். சுகுமார், சுகாதார உதவியாளர்களின் மேற்பார்வையாளர் எஸ். ஜெயகுணம், வளவாளர்களான திருமதி. பி. சந்திரகுமாரி, திருமதி. எம். பி. ஆமினா, தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவன உத்தியோகத்தர்கள் மற்றும் சிங்கள பயிற்சி பெற்ற அரச ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்வில் பயிற்சி பெற்ற ஊழியர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றதுடன் சிங்கள பாரம்பரிய உணவு முறை சார்ந்த கண்காட்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை தமிழ் மொழியில் சுகாதார உதவியாளர் .ந.சதீஸ்குமார் மற்றும் சிங்கள மொழியில் சுகாதார உதவியாளர் ரி. பிரசாந் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர்.