கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் புறநிலை கற்கைகள் பிரிவினால் நடாத்தப்பட்ட சான்றிதழ் கற்கை நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 18.11.2023 சனிக்கிழமை
காலை 9 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் கலையும் கைவினையும், செவ்வியல் கீபோர்ட், பரதநாட்டியம், நட்டுவாங்கம், வயலின், அடிப்படை சிங்களம், தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆக்கத்தொடர்பாடலுக்கான ஆங்கிலம் போன்ற கற்கை நெறிகளில் சித்தியடைந்த 147 மாணவர்களுக்குமான சான்றிதழ் வழங்கப் பட இருக்கின்றன.