மொரீஷியஸில் இடம்பெறும் மேற்கு இந்திய கடல்சார் பாதுகாப்பு தொடர்பான 3வது அமைச்சர்கள் மாநாட்டின் போது மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் உடன் வெளிவிகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம். அலி சப்ரி சிநேகபூர்வ சந்திப்பினை இன்று மேற்கொண்டார்.
இடம்பெற்ற இச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.