கிரானில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

க.ருத்திரன்

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தில் இன்று (16) நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்புப் படையின் கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கு தலைமைத்துவம் வகிக்கும் 232 ஆவது காலால் படை பிரிகேட்டின் மேஜர் ஜெனரல் நிலன்த பிரேமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் இவ் கருத்தரங்கு மாணவர் மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் கல்குடா வலயத்திற்குட்பட்ட திகிலிவெட்டை மற்றும் புலிபாய்ந்த கல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த 150 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
உலகலாவிய ரீதியில் ஆசிய கண்டத்தில் இலங்கை ஒரு முக்கிய போதைப் பொருள் மையமாக உள்ளது.இதனால் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கப் போகும் இளைஞர் யுவதிகளை போதைப் பொருளில் இருந்து விடுவித்து வளமான நாட்டை உருவாக்குவதே இவ் விழிப்புணர்வு செயலமர்வின் நோக்கமாகும்.
இதன்போது தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பி.தினேஸ் கலந்து கொண்டு விரிவுரையாற்றினார்.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ச.யோகராசா,பிரிகேடியர் அஜித் புஸ்பகுமார,போதைப் பொருள் கட்டுப்பாட்டு புணர்வாழ்வு இணைப்பாளர் லெப்ரினட் கேணல் சந்திக்க எகெலபொல,232 ஆவது காலால் படை சிவில் இணைப்பாளர் இந்துனில் பாலசூரிய ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.