கட்டளையிடப்பட்ட தவறாளர்களுக்கான போதைவஸ்து பாவனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு

ஹஸ்பர்_
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கட்டளையிடப்பட்ட தவறாளர்களுக்கான போதைவஸ்து பாவனை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (16)இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வானது கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் இயங்கும் பிராந்திய சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.இதில் நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்ட தவறாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போதை பாவனையில் இருந்து விடுபடுவதற்கான உளவளத்துனை செயற்பாடுகள் மற்றும் உடல் உள ரீதியான தாக்கங்கள் சமூக சீர்கேடு போன்ற பல பாதக விடயங்களில் இருந்து தங்களை பாதுகாக்கும் வழிமுறைகள் தொடர்பில் வளவாளர்களால் விழிப்புணர்வூட்டப்பட்டது.தம்பலகாமம்,கந்தளாய்,கிண்ணியா ஆகிய பகுதிகளை சேர்ந்த தவறாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் வளவாளர்களாக கப்பல்துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் சிரேஷ்ட பதிவாளரும் வைத்தியருமான சாஸ்வதா சிவபதிஸ்,வைத்தியர் ஆர்.எம்.மல்சா ஜெயரட்ண உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு பல விடயங்களை தெளிவூட்டினர்.
இதில் திருகோணமலை மாவட்ட  பிராந்திய சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தரும் பொருப்பதிகாரியுமான எம்.எச்.முபாரக்,சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன்,சமுதாயம் சார் சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன்,சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.