உறவுகள் சொல்லும் உணர்வு சிறுகதை நூல் திருகோணமலையில் அறிமுக விழா..!

(அ . அச்சுதன்)

 

கதிர்.திருச்செல்வம் அவர்களின் “உறவுகள் சொல்லும் உணர்வு” சிறுகதை நூல் அறிமுக விழா  நேற்று புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு கவிஞர் க . யோகானந்தன் தலைமையில் திருகோணமலை – கிழக்கு
மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள கேட்போர் கூடத்தில்
நடைபெற்றது.

நூல் அறிமுகத்தை மாகாண கல்வி அமைச்சின் திட்டப் பணிப்பாளர் ஏ.சி.எம்
முஸ்ஸில் அவர்கள் நிகழ்த்தினார்.
முதன்மை அழைப்பாளராக கிழக்கு மாகாண பண்பாட்டு
அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச.நவநீதன் அவர்கள்
கலந்து கொண்டார்.
நூல் திறனாய்வினை தென் கிழக்குப்
பல்கலைக்கழக மொழியியல் துறை
பேராசிரியர்.அ.ப.மு.அஸ்ஃரப் அவர்கள் நிகழ்த்தினார்.
நூலின் முதல் பிரதியை அதிபர் திருமதி யு . சுஜந்தினி அவர்களுக்கு பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ச. நவநீதன் வழங்கி வெளியீட்டு வைத்தார்.
ஏற்புரையையும் நன்றியுரையையும்
நூலாசிரியர் கதிர்.திருச்செல்வம்
வழங்கினார்.