கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஆசிரியர்களாக கடமையாற்றி இலங்கை அதிபர் சேவைக்கு தெரிவானவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் ஆசிரியர்களாக கடமையாற்றி இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள  கல்லூரியின்  நான்கு ஆசிரியர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு  ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரி அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள நான்கு புதிய அதிபர்களில் உயர் தர பிரிவு புவியியல் பாட ஆசிரியர்களான எஸ்.எம். உவைஸ், றிஸ்லியா முகம்மது உவைஸ், ஆங்கில பாட ஆசிரியை ஏ.பீ. றோஷன் டிப்றாஸ் (தரம் 06 பகுதி தலைவி), உயர் தர விஞ்ஞான பிரிவு (தமிழ் மற்றும் ஆங்கில மொழி) ஆசிரியர் எம்.எச். இஹ்ஸானுல் இஸ்சாத் ஆகியோர்களை ஆசிரியர் குழாம் கல்லூரி முன்றலில் பூ மாலை  அணிவிக்கப்பட்டு சாரணிய, முதல் உதவி குழுவின் அணி வகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு அதிபர் அலுவலகத்தில் விஷேட முகாமைத்துவ குழு ௯ட்டமும் இடம்பெற்றதுடன் வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர்களான எம்.எஸ் மனூனா,
என்.டி நதீகா, பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.