மன்னாரில் போதைப் பொருளுடன் இருவர் கைது.

(வாஸ் கூஞ்ஞ) மன்னாரில் போதைப் பொருள் கடத்தில் காரர்hகள் மட்டுமல்ல அதன் பாவனையாளர்களையும் கண்டு பிடிப்பதில் பாதுகாப்பு பிரிவினர் தற்பொழுது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வகையில் மன்னார் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செவ்வாய் கிழமை (14) நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போது ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் , பள்ளிமுனை பிரதேசத்தில் வசிக்கும் 19 மற்றும் 25 வயதுடையவர்களாவர்

அவர்களிடமிருந்து சுமார் 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர்கள் போதை பொருள் கடத்தல் காhரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட;டு வருவதாகவும் இவர்களை புதன்கிழமை (15) மன்னார் மாவட்ட நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.