( வாஸ் கூஞ்ஞ) திடீரென சுனாமி பேரழிவு ஏற்படும்போது நாம் எவ்வாறு அதிலிருந்து தப்பித்துக் கொள்வது என்ற விழிப்புணர்வு நடவடிக்கை செயற்திட்டமானது மன்னாரில் மாணவர்கள் மத்தியில் நடைபெற்றது.
மன்னார் பிரதேச செயலகமும் , மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பல திணைக்களங்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வானது செவ்வாய்கிழமை (14) காலை 10.30 மணியளவில் தாழ்வுபாடு சென் ஜோசப் பாடசாலையில் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றது.
மாவர்களை மையமாக வைத்து நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் சுனாமி எச்சரிக்கை தகவலானது மன்னார் வலயக் கல்வி அலுவலர் மூலம் பாடசாலை அதிபருக்கு கிடைக்கப்பபெற்றவுடன் அதிபரால் பாடசாலை ஆசிரியார்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உடனடியாக அபாய ஒலி எழுப்பப்பட்டு சில நிமிடங்களுக்குள் மாணவர்கள் ஒன்றாக்கப்பட்டு முதலுதவிகளுக்காக வருகை தந்த படையினரின் வாகனங்களிலும் தனியார் பேருந்துகள் மற்றும் மருத்துவ துறையினரின் அம்புலனஸ் வண்டிகளிலும் விரைவாக பாதுகாப்பான இடங்கள் நோக்கி வெளியேற்றப்பட்டார்கள்
மேலும் ஆசிரியர்களும் பெரிய மாணவ மாணவியர் விரைவாக ஓடியும் சுனாமி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த தாராபுரம் அல்மினா பாடசாலைக்குச் சென்று சுனாமி விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டிருந்த நடவடிக்கையாக அமைந்திருந்தது.
நிகழ்வின் இறுதியில் சம்பந்தப்பட்ட திணைக்கத்தினர் இணைந்து நடைபெற்ற சுனாமி ஒத்திகை தொடர்பான சாதக பாதக பலன்கள் மற்றும் மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய முன் நடவடிக்கைள் தொடர்பான கருத்துப் பகிர்வுகளும் நடைபெற்றது
இந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் மனோகரன் பிரதீப் , அனர்த்த முகாமைத்துவ அதிகாரி கனகரெத்தினம் திலீபன் மற்றும் மன்னார் வலயக் கல்வி அலுவர் , மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் , மன்னார் வலயக் கல்வி அலுவலர் , சுகாதாரத் திணைக்களம் , முப்படையினர் , இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினர் , சென் ஜோசப் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் , மாணவர்கள் சம்பந்தப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் என்று பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.