(அஸ்ஹர் இப்றாஹிம்) இலங்கையிலுள்ள சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான கராட்டே சுற்றுப் போட்டி கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இச் சுற்றுப் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 62 தங்கப் பதக்கங்களையும், 47 வெள்ளிப்பதக்கங்களையும், 59 வெண்கலப்பதக்கங்களையும் வென்று 10 வது வருடமாக 510 புள்ளிகளைப் பெற்று தொடர்ச்சியாக சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.