மட்டக்களப்பில் அமைச்சர் டக்கிளஸ் பிறந்த தினத்தையிட்ட  கட்சி உறுப்பினர் ஒருவர் 20 பேருக்கு உலர் உணவு பொதி வழங்கிவைப்பு

(கனகராசா சரவணணன்)  மட்டக்களப்பில் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவின் 66 வது பிறந்த தினத்தையிட்டு கட்சி உறுப்பினர் அன்தனிசில் ராஜ்குமார் அவருக்கு நல்லாசி வேண்டி  பெண் தலைமைதாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த 20 பேருக்கு உலர் உணவு பொதியை இன்று செவ்வாய்க்கிழமை (14) கட்சி காரியாலயத்தில் வைத்து வழங்கிவைத்தார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் அன்தனிசில் ராஜ்குமார் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவின் பிறந்த தினத்தையிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி உலர் உணவு பொதிகளை தானமாக வழங்கும் நிகழ்வு கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றது

இந் நிகழ்வில் அதிதிகளாக  கட்சி மாவட்ட அமைப்பாளர் சிவானந்தாரஜா கட்சியின் உறுப்பினர் அன்தனிசில் ராஜ்குமார் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைதாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த வயோதிப பெண்கள் 20 பேருக்;கு உலர் உணவு பொதிகளை வழங்கிவைத்தனர்.