மருதமுனை   கடற்கரை பகுதியில் அமைந்துள்ள  கோபுரத்தை பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு. 

(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்திற்கு அடையாளமாக திகழும் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள  கோபுரத்தை கடலரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கமைய இன்று அப்பகுதிக்கு கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி உட்பட கரையோரங்கள் பேணல் பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர் துளசிதாசன் கரையோரங்கள் பேணல் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்  எம்.எஸ். அஹமட் மஹ்ருப் ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.
மருதமுனை பிரதேசத்திற்கு அடையாளமாக திகழும் கோபுரத்தில் கடந்த 2022 ஆண்டு கடலரிப்பு ஏற்பட்டிருந்தது.அந்த நேரம் இப்பகுதி மக்களினாலும் எமது கரையோரங்கள் பேணல் திணைக்களத்தினாலும் கடலரிப்பை தடுப்பதற்கு தற்காலிகமாக உரப்பை கொண்டு தற்காலிக அணைக்கட்டு அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.ஆனால் இவ்வாண்டு கடலரிப்பு அகோரமாக இருப்பதனால் இப்பிரச்சினைக்கு நிரந்திர தீர்வினை காண்பதற்கு எமது திணைக்களத்தின் முழுமையான உதவியுடன் கல்முனை பிரதேச செயலாளரின் வேண்டுகோளிற்கிணங்க இத்திட்டமானது 1.7 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் நிரந்திரமான தீர்விற்கு வழி கோலும் என முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து  கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் தெரிவித்தார்.
மருதமுனை பிரதேசத்திற்கு அடையாளமான கோபுரமானது கடந்த வருடமும் கடலரிப்பினால் பாதிப்புற இருந்த போதிலும் தற்காலிகமாக மண்மூடைகளை கொண்டு கடலரிப்பினை கரையோரம் பேணல் திணைக்கள உதவியுடன் மேற்கொண்டோம்.கடந்த காலங்களில் எம்மால் விடுக்கப்பட்டு வேண்டுகோளிற்கமைய இன்று இத்திட்டம் நிரந்திர தீர்வாக முன்னெடுக்கப்படுகின்றது.அதற்காக நன்றிகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு பிரதேச செயலாளர் என்ற ரீதியில் தெரிவிக்க விரும்புகின்றேன்.இது தவிரமருதமுனையின் அடையாளம் மாத்திரமல்ல.ஏனைய பகுதி மக்கள் வந்து செல்கின்ற  சுற்றுலாத்தலமாக விளங்குகின்ற இக்கடற்கரை பிரதேசம் மேலும் அழகூட்டப்படவுள்ளது.அங்குள்ள மீனவ  மக்களின் வாழ்வாதார தொழில் முயற்சிகளையும் இக்கோபுரம்  அழிவடையாத வண்ணம் பாதுகாத்து மீளக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
மேலும்  இக்கோபுரத்தை சுற்றி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.