கொழும்பில் இருந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாரா திணைக்களத்திற்கு சரக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்பட்ட சரக்கு பெட்டி மட்டக்களப்பு ரயில் நிலையத்தை வந்தடைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த 5 ம் திகதி அந்த ரயில் பெட்டியை உடைத்து அங்கிருந்து 750 கிராம் கொண்ட 750 பக்கற் திரிபோச மா பக்கற்றுக்கள் திருட்டுப்போயிருந்த நிலையில் 7ம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.இதனையடுத்து பொலிசாரின் விசாரணையில் திருடப்பட்ட திரிபோச மா பக்கற்றுக்களை இருவர் விற்பனை செய்துவருவதாக கிடைத்த தகவலினையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.எம்.எஸ்.கயநாயக்கா தலைமையிலான பொலிசார் சம்பவதினமான நேற்று இரவு கருவப்பங்கோணி மற்றும் கூழாவடி பிரதேசத்தைச் சேர்ந்த 3, 30 வயதுடைய இருவரை அவர்களது வீடுகளில் வைத்து கைது செய்ததுடன் திருடப்பட்ட சிறியளவிலான திரிபோசமா பக்கற்றுக்களை மீட்டுள்ளனர்.
|