பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டிலான நீச்சல் மற்றும் உயிர் காப்பு பயிற்சி நெறி வகுப்பு.   

(எம்.ஏ.ஏ.அக்தார்)    பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில், இலங்கை உயிர் காப்பு சங்கம் மற்றும் கல்குடா சுழியோடிகள் அமைப்பு  என்பன இணைந்து நடாத்திய  இலவசமான நீச்சல் பயிற்சி மற்றும் உயிர் காப்பு சான்றிதழ் பயிற்சிநெறி ஆரம்ப வகுப்பு பாலமுனை மின்ஹாஜ் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
பாலமுனை இளைஞர்கள் சபையின் தலைவர் ஏ.எல்.எம். சீத் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில்,எமது அமைப்பின் ஆலோசகரும்  சட்ட வைத்தியருமான  எஸ்.எம்.றிபாஸ்த்தின் அவர்களின்  அழைப்பில் மூவ் கல்குடா சுழியோடிகள் அமைப்பின் பிரதம பயிற்றுவிப்பாளரும்  விசேட சுழியோடியும் உயிர்காப்பாளருமான கபீர் இப்றாஹிம், மூவ் கல்குடா சுழியோடிகள் அமைப்பின் உதவி பயிற்றுவிப்பாளரும் ஓஷியன் யுனிவர்சிட்டி மாணவன் ஏ.எம்.எம்.றிஸ்வான்,  உதவி பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம்.சஜ்ஜாத் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை ஆரம்பித்து வைத்தனர்.
மேலும் இந் நிகழ்வில் மின்ஹாஜ் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.பாயிஸ், கைமா விளையாட்டுக் கழக தலைவர் ஏ.ஆர்.சபீலூர் றசாத், மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் ஏ.ஆர்.றிப்கான்,  அமைப்பாளர் எம்.ஏ.சிபான், உபதலைவர்களான யூ.எல்..ஹஸ்ஸாலி, ஐ.எம்..ஹம்தான் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்  தொடர்ச்சியாக நீச்சல் பயிற்சிகள் அக்கரைப்பற்று மத்திய கல்லூரின் நீச்சல் தடாகத்தில் தொடராக இடம்பெறவுள்ளது.