(அபு அலா) கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் 1000 பயன்தரும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் இன்று (13) இடம்பெற்றது.
“மாகாணம் செழிக்க மரம் நாடுவோம்” எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.முஹம்மது
பைஷல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.அப்துல் ஹை பிரதம அதிதியாக கலந்துகொண்டு மரம் நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
பிரதேசம் செழித்தால், மாவட்டம் செழிக்கும். மாவட்டம் செழித்தால், மாகாணம் செழிக்கும். மாகாணம் செழித்தால், நாடு செழிக்கும். இதுவே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்
என்றும், இந்தப் பயன்தரும் 1000 மரக்கன்றுகளை இவ்வருட இறுதிக்குள் மாகாணத்திலுள்ள பிரதேசங்களில் நட்டு வைக்கப்படும் என கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எம்.ஐ.முஹம்மது பைஷல் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிம்ஸான், உபதலைவர், பொருளாளர், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.