(வாஸ் கூஞ்ஞ)
மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டை எடுத்துச் சென்ற இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவ்ர்களுக்கு எதிரான சட்ட சடவக்கையை மன்னார் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
சனிக்கிழமை (11) மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கட்லட்டை (கடல் வெள்ளரி) கொண்டு சென்ற இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டள்ளனர்.
மன்னார் நகருக்குள் ஒரு முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோதே 49 கடலட்டைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விரு சந்தேக நபர்களும் மன்னார் விடத்தில்தீவைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பொலிசார் சட்ட நடவடி;கையை மேற்கொண்டுள்ளனர்.