விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து திரு.ரொஷான் ரணசிங்கவை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பல இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட் நிர்வாகத்தின் மீது அவர் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அமைப்புகளின் அறிவிப்பின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.