மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளை துரித கதியில் கணனிமயமாக்கும் செயற்திட்டம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளை கணனி மயமாக்கல் ஊடாக கணக்கு நடவடிக்கையை நடாத்தி செல்லுதல் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் செயல்பாட்டை துரிதப்படுத்துவதற்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட  செயலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில்  இன்று (10) நடைபெற்றது.

சமுர்த்தி வங்கிகளை கணனி மயமாக்கல் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்கான இச்செயலமர்வை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி வங்கிகளின் கணனி பிரிவுக்கான தொழில் நுட்ப  உத்தியோகத்தர் த.பவளேந்திரனினால்  முன்னேடுக்கப்பட்டது.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 31 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், வங்கி சங்க முகாமையாளர்கள், கணக்காய்வு உத்தியோகத்தர்கள், கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் A+ தொழில் நுட்ப உத்தியோகத்தர்களும் பங்குபற்றி இருந்தனர்.

இதன் போது சமுர்த்தி உத்தியோகத்தர்களினால் கணனிமயமாக்கும் போது எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு அவற்றுக்கான  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளர் திருமதி நிர்மலாதேவி கிரிதராஜ் மற்றும் மாவட்ட செயலக சிரேஸ்ட சமுர்த்தி முகாமையாளர் ஜே.எப். மனோகிதராஜ் ஆகியோரும் கலந்து கொண்டானர்.