தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் ஏற்பட்டுள்ள நேர்மறையான முற்போக்கான மாற்றங்களிலிருந்து சரியான பதில்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்,இங்கு பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியவரிடம் இருந்து முறைகேடுகள் நடந்திருப்பது அனைவருக்கும் தெரியும் என்றாலும்,குறித்த நபர் மீண்டும் சுகாதார அமைச்சின் MOH சேவைக்கு பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என எதிர்க்கட்சித் தலைவர் இன்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுபோன்ற முறைகேடுகளை செய்த ஒருவர் எவ்வாறு மீண்டும் நியமிக்கப்பட்டார் என்பது சிக்கலுக்குரிய விடயம் என்றும்,இப்படிப்பட்ட ஊழல்வாதியை நோய்த் தடுப்புத் துறைக்கு எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும்,MOH சேவை என்பது தாய் சேய் நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான ஒரு துறை என்பதால் அவர்களுக்கு அநீதி இழைக்காமல் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.