(வாஸ் கூஞ்ஞ) வட மாகாணம் கிழக்கு மாகாணத்தை விட மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது. சீனாவின் ஒரு மாநிலமானது கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஆளுநர் அப்பகுதி மக்களுடன் இங்கு வந்து உதவிகளை செய்து வருகின்றனர். இவ்வாறு வட மாகாணமும் சீனா இணையத்துடன் இணைத்து உதவி செய்ய இருக்கின்றோம்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு கியூ சின்ஹொங் தலைமையில் ஒரு குழுவினர் செவ்வாய் கிழமை (07) மன்னாருக்கு வருகை தந்திருந்தனர்.
சீனா மக்களால் இலங்கை மக்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட தலா 7000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் 50 குடும்பங்களுக்கு வழங்கும் வைபவம் வங்காலை கிராமத்தில் நடைபெற்றது. இதன்போது சீனத் தூதுவர் திரு கியூ சின்ஹொங் தொடர்ந்து உரையாற்றுகையில்
நானும் என்னுடன் வருகை தந்திருக்கும் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
நாங்கள் ஐயாயிரம் உணவுப் பொதிகள் வழங்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம். இதில் ஆயிரம் உணவுப் பொதிகளையே மன்னாருக்கு வழங்க இருக்கின்றோம்.
இருந்தும் இங்கு உரையாற்றிய அருட்தந்தை மன்னார் மாவட்ட மக்களின் நிலைமையைப் பற்றி தெரிவித்ததைத் தொடர்ந்து எதிர்காலத்தில் மன்னாருக்கு அதிகமான உதவிகளை நாம் செய்ய இருக்கின்றோம்.
நான் நினைக்கின்றேன் உங்களுக்கு தற்பொழுது வழங்கப்பட இருக்கும் இந்த உணவுப் பொதியானது உங்கள் வாழ்வாதாரத்துக்கு ஏதோ ஒரு வழியில் நன்மை பயக்கும் என நம்புகின்றேன்.
இந்த ஒவ்வொரு உணவு பொதியும் ஏழாயிரம் ரூபா பெறுமதியானது. சீனா அரசாங்கமும் சீனா மக்களும் உங்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்யும்.
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தேன். அந்தநேரம் கொவிட் 19 பரவி வந்த நேரம். அந்த நேரம் நான் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளும் பணமும் வழங்கியிருந்தேன்.
கொவிட் 19 காலத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் சினோ பாம் என்ற ஊசி மருந்து ஏற்றியிருப்பீர்கள். சீனா அரசாங்கம் அதிகமான சினோ பாம் ஊசிகளை வடக்குக்கும் கிழக்குக்கும் அதிகமாக வழங்கியிருந்தது.
ஆனால் இப்பொழுது நிலைமை மாறி நாம் ஒவ்வொருவரும் சகோதரத்துவத்துடன் வாழவும் உதவி செய்யவும் காலம் கனிந்துள்ளது.
எங்களுடைய கொள்கையானது நாம் எந்த மதத்தினராகவும் பிரிவுனராகவும் இருக்கலாம் ஆனால் நாம் நண்பர்கள் என்பதை மறக்க முடியாது.
நீங்கள் எத்தனை சவால்களை எதிர்நோக்கினாலும் சீனா அரசும் அந்நாட்டு மக்களும் உங்களுடன் இருப்பர். ஏற்கனவே வட மாகாணத்துக்கு 150 மில்லியன் டொலர் வழங்குவதற்கு உறுதி அளித்திருக்கின்றது.
இதில் ஒரு பகுதி மீன்பிடி உபகரணங்கள் கொள்முதல் செய்யவும் இதில் மூன்றில் ஒரு பகுதி இவ்வாறான உலர் உணவுப் பொதிகள் வழங்கவும் மிகுதி வீட்டுத் திட்டங்களை நிர்மானிக்க திட்டமிட்டுள்ளது.
இவைகள் யாவும் மக்களுக்கு சென்றடையும் ஒரு திட்டமாக இருக்கின்றது. இந்த திட்டங்கள் வடமாகாணத்தில் அதிலும் மன்னாரிலும் இது நடைமுறைப்படுத்தப்படும்.
இத்துடன் நாங்கள் சீன முதலீட்டாளர்களையும் சீன உல்லாச பயணிகளையும் இங்கு வருகை தந்து நோக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளோம்.
உண்மையில் வட மாகாணம் கிழக்கு மாகாணத்தை விட மிகவும் பின்தங்கி காணப்படுகின்றது. சீனாவின் ஒரு மாநிலமானது கிழக்கு மாகாணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஆளுநர் அப்பகுதி மக்களுடன் இங்கு வந்து உதவிகளை செய்து வருகின்றனர்.
இவ்வாறு வட மாகாணமும் சீனா இணையத்துடன் இணைத்து உதவி செய்ய இருக்கின்றோம். மக்களின் பிரச்சனைகளின் உண்மைத் தன்மையை நாம் கண்டு கொள்ளும்போது நிச்சயம் நாம் அவற்றை தீர்ப்பதற்கு முயற்சிப்போம்
இலங்கையின் பொருளாதார மீள்ச்சியிலிருந்து மீள்வதற்கு சர்வதேசம் உதவிகள் செய்ய வேண்டும் என்பது நியதியாக இருக்கின்றது.
சீனோக்பக் என்ற ஒரு பிரபலயமான கம்பனி மன்னாரிலும் இயங்கிக் கொண்டு இருக்கிளது. இந்த கம்பனி உலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது.
இந்த கம்பனி எரிபொருளை வடிகட்டுவதில் முதலாவது இடத்தில் இருக்கின்றது. இந்த கம்பனியை ஹம்பாந்தோட்டையில் அமைப்பதற்கு அரசுடன் பேசி வருகின்றது.
இது வெற்றியளிக்குமாகில் இந்த கம்பனி பல கோடி டொலர்களை இங்கு முதலீடு செய்ய ஆய்த்தமாக இருக்கின்றது.
இதனால் இலங்கையில் பல துறைகளை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பும் ஏற்படும். இதனால் பலருக்கு வேலை வாய்ப்புக்களையும் வருவாயையும் ஈட்டக்கூடியதாக இருக்கும்.
இது ஒரு ஆரம்பமே அண்மையில் இலங்கை ஜனாதிபதி சீனாவுக்கு விஜயத்தை மேற்கொண்டு இரு நாடுகளுக்கிடையேயும் ஒரு ஒப்பந்தத்துக்கு உடன்பட்டுள்ளார்.
இதன் மூலம் அதிகமான கடல் உணவுகளை எற்றுமதி செய்யும் வாய்ப்பும் எற்பட்டுள்ளது. உலக சந்தையில் சீனா ஒரு பெரிய இடத்தை வைத்திருக்கின்றது.
இதனால் இலங்கையிலிருந்து கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது. திருகோணமலை ஒரு கேந்திர இடமாக இருப்பதால் அங்கிருந்து எற்றுமதியையும் இறக்குமதியையும் மேற்கொண்டு வருகின்றது.
எமது இரு நாடுகளின் உறவுகள் சரித்திரம் வாய்ந்தது. நட்;பை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டியது ஒன்றாகும். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சர்வதேச ஒத்துழைப்புடன் தீர்த்துக் கொள்வீர்கள் என இவ்வாறு தெரிவித்தார்.