(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் தென் பகுதியில் கொண்ணையன் குடியிருப்பு பிரதேசத்தில் மக்களின் அனுமதியின்றி தனியார் காணிகளை அபகரித்தும் மக்கள் நீண்ட காலமாக நடமாடி வந்த பாதைகளையெல்லாம் தடைப்படுத்தியும் கனியவள மணல் அகற்றுவதற்கான நடவடிக்கையாக
புதன்கிழமை (08) மன்னார் மற்றும் தென்பகுதிகளிலுள்ள சுமார் இருபது திணைக்கள அதிகாரிகள் பெருந் தொகையான வாகனங்களில் இப்பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
இதை அறிந்த அவ்வூர் மக்கள் தங்கள் ஆலய மணிகளை ஒலிக்க வைத்து கிராம மக்களை ஒன்றுத் திரட்டி வருகை தந்தவர்கள் சம்பவ இடத்துக்கு செல்ல முடியாது பாதைக்கு குறுக்கே மரங்களை போட்டு தடைசெய்தனர்.
அத்துடன் இச் சம்பவத்தை அறிந்து மன்னார் பிரஜைகள் குழுவினர் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் சம்பவ இடத்துக்குச் சென்று இப்பகுதிக்கு திடீரென வந்த நோக்கத்தை கேட்டறிந்தனர்.
அப்பகுதியில் கனியவள மணல் அகழ்வதற்கான இடங்களை பார்வையிட்டு அதற்கான அனுமதியை வழங்கும் நோக்குடனே இக்குழுவினர் வந்திருந்தமையை அறிந்ததும் மக்கள் திரண்டு இதற்கான எதிர்ப்பை மேலும் தெருவித்ததுடன்
இந்த மணல் அகழ்வு மற்றும் காற்றாலைகளால் இப்பிரதேசம் எதிர்கொண்டு வரும் பாதிப்புக்களை தெளிவாக வருகை தந்திருந்த அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தி குறிப்பிட்ட இடத்துக்கு அவர்களை நகர்வதற்கும் பாதையை மறித்து முன்செல்ல விடாது தடுத்து திருப்பி அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் விஷேட கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த அதிகாரிகளும் உள்ளுர் அதிகாரிகளும் மன்னார் மாவட்ட பொது அமைப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.