மன்னார் மக்களில் ஆயிரம் குடும்பங்களுக்கு சீனா மக்களால் வழங்கப்பட்ட உலர் உணவும் பொதிகள்.

(வாஸ் கூஞ்ஞ) மன்னாhருக்கு விஜயத்தை மேற்கொண்ட இலங்கைக்கான சீனத் தூதுவர் குழு தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மீனவக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு கியூ சின்ஹொங் தலைமையில் ஒரு குழுவினர் யாழ் விஜயத்தை முடித்துக் கொண்டு செவ்வாய் கிழமை (07) மன்னாருக்கு வருகை தந்திருந்தனர்.

சீனா மக்களால் இலங்கை மக்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட தலா 7000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கும் வைபவம் வங்காலை கிராமத்தில் மாலையில் நடைபெற்றது.

மன்னார் சமூக சேவையில் ஈடபட்டு வரும் ஜே.ஜே.கெனடி அவர்கள் இலங்கைக்கான சீனத் தூதரகத்துடன் மேற்கொண்ட நவடிக்கையின் காரணமாக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வுச் சங்கத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் 1000 குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக வங்காலையில் மீனவ கூட்டுறவுச் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டுக்குள் வாழும் 50 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவு பொதிகளை வழங்கி இது ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் மறுவாழ்வு துயர் துடைப்பு சங்கத்தின் தலைவர் அருட்பணி நவரட்ணம் அடிகளாரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 541 பிரிகேட் கமாண்டர் யோகான் பெர்னாண்டோ , ம.து.து.ம.வாழ்வுச் சங்க செயலாளர் ராதா பெர்னாண்டோ , மன்னார் மறைமாவட்ட முன்னாள் குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார் மற்றும் சமூகச் சேவையாளர் ஜே.ஜே.கெனடி உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.