விளையாட்டுத்துறை குழு சூதாட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அதிருப்தி.

இலங்கை கிரிக்கெட் சபையில் நிலவிவரும் ஊழல்,மோசடி மற்றும் திருட்டுக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டுத்துறை அமைச்சர் இடைக்கால குழுவொன்றை நியமித்துள்ளார் என்றும்,இவ்வாறு குழுக்களை நியமிப்பதுடன்,பாடசாலை, நகரம்,சங்கம்,மாவட்டம் மற்றும் மாகாண மட்டங்களில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கான தனது வேலைத்திட்டத்தை இவ் வாரத்திற்குள் பாராளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் (7) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
*இந்த இடைக்கால குழுவின் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார் என்பது மிகவும் நகைப்புக்குரிய* விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது குழு சூதாட்டம் என்றும்,கிரிக்கெட் விளையாட்டு ஆளுமைகள் மற்றும் ஊழல் அல்லது மோசடி குற்றச்சாட்டுகள் இல்லாதவர்கள் கிரிக்கெட் நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்றும்,இவ்விடயத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு கருத்திலும்,ஜனாதிபதி வேறொரு கருத்திலும் இருந்தால் மீண்டும் நெருக்கடியான சூழ்நிலை உருவாகி பிரச்சினை பெரிதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.