(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) திறந்து வைத்ததையடுத்து பொலிசார் கடமைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த மேச்சல்தரை பகுதியில் பொலிஸ் காவல் அரண் ஒன்று அமைக்குமாறு மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் பண்ணையாளர்கள் கோரிக்கைக்கு அமைய சோதனைசாவடி அமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானிக்கப்பட்ட பொலிஸ் சோதனைச் சாவடியை கரடியனாறு பொலிஸ் நிலையத்தின் பிரிவாக புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு அதனை நேற்று சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சென்று பார்வையிட்டு பொலிசாரை கடமைக்கு அமர்த்தி கடமைகளை ஆரம்பித்து வைத்துள்ளார்.