கிழக்கு மாகாண இலக்கிய விழா 2023 ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதிலேயே இளங்கலைஞர் விருதுக்கு ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.ஊடகவியயலாளர் சக்திவேல் அவர்கள் சுமார் 18 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருகின்றார். அவர் கிழக்கு மாகாணத்தின் பல கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று மக்களின் பிரச்சனைகளை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும், ஆவணப்படுத்தல் தொகுப்புக்கள் ஊடாகவும் வெளிக்கொணர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர் 2008 இல் சிறந்த மக்கள் சேவை ஊடகவிருது, 2018 இல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது, கடந்த வருடம் சுப்பிரமணியம் செட்டியார் விருது, உள்ளிட்ட தேசிய விருதுகள் மற்று கிராமிய, பிரதேச மட்டங்களில் பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
யோகாசன பயிற்றுவிப்பாளராகவும், முதலுதவிப் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருவம் அவர் பாடலாசிரியர், எழுத்தாளர் என இலக்கியத்துறையில் மிளிர்கின்ற அவர் கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளராகவும், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பல பொது அமைப்புக்களினூடாக பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் வருடா வருடம் நடத்தப்பட்டுவரும் கிழக்கு மாகாண இலக்கிய விழா எனும் தொனிப்பொருளின் கீழ் வித்தகர் விருது, இளங் கலைஞர் விருது, பாடல் போட்டிகளுக்குரிய விருது, கலை இலக்கிய அறிவுப் போட்டியில் வெற்றி பெறும் கலை மன்றங்களுக்கான விருது, அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்க போட்டிகளுக்கான விருது, சித்திரம், ஓவியம், புகைப்படம், கவிதை, மற்றும் நூல்களுக்கான விருதுகளையும் வருடாந்தம் வழக்கி கலை இலக்கியத்துறையில் மிளிர்கின்றவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.