கல்முனையில் டிபி ஐடி கெம்பஸ் கல்வி சேவை விஸ்தரிப்பு.

(வி.ரி.சகாதேவராஜா)   இலங்கையின் பிரபல்யமான டிபி கல்வி ஐடி கெம்பஸின்(DP Education IT Campus) கல்விச் சேவை கல்முனையில் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கல்வி நிலையம் தொடர்பான விளக்கம் அளிக்கும் ஊடகச் சந்திப்பும் அறிமுக நிகழ்வும் சாய்ந்தமருது டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தென் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் றஸ்மி ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தம்மிக மற்றும் பிரிசிலா பெரேரா அறக்கட்டளை நிறுவனத்தின் கல்வி நிலைய செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
 கல்முனை அல்ஹாமியா மற்றும் டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை போன்றவற்றின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த கல்வி செயறிட்டம் இலவசமாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.
நிகழ்வில் டாக்டர் சனா ஜமால்டின் மற்றும் மறூஸ் ஜமால்டீன் ஆகியோர் திட்டங்கள் செயற்பாடு தொடர்பாக விளக்கமளித்தார்கள்.
 அல்ஹாமியாவின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் சிறப்பு உரையாற்றினார் .
முதல் கட்டமாக 25 லட்ச ரூபா பெறுமதியான புலமைப் பரிசில் 750 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.