ஏதோ, என்னால முடிஞ்சது.. பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிரதீப்பின் முதல் பதிவு.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியே வந்தவுடன் பதிவு செய்த முதல் ட்விட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று பிரதீப் வெளியேற்றப்பட்டது சக போட்டியாளர்களுக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவின், பிரியங்கா, சினேகன் உள்பட பலர் அவரது வெளியேற்றத்தை மன வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் ’என்னுடைய பிபி7 கோப்பைகள்’ என ஒரு புகைப்படத்தை பதிவு செய்து ’ஏதோ என்னால் முடிந்தது, சிம்பிள் ஸ்டார்’ என குறிப்பிட்டுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த ஸ்டார், லைக்ஸ், டிஸ்லைக் பட்டன்களை அவர் புகைப்படம் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் வைரல் ஆகி வரும் நிலையில் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு அநியாயம் நேர்ந்து விட்டது, ஆனால் கண்டிப்பாக நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்’ என்று தெரிவித்து வருகின்றனர்.

பிரதீப்பின் இந்த ட்விட்டிற்கு பதிவு செய்துள்ள சனம் ஷெட்டி, ’இந்த கொடூரமான வெளியேற்றத்திற்கு நீங்கள் தகுதியானவர் அல்ல. யாரும் இங்கு சரியானவர்கள் இல்லை. உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதது! பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் உங்களின் தனித்துவமான விளையாட்டுக்காக நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

Thanks  indiaglitz