மொட்டுவின் 4 கோரிக்கைகள் ரணில் ஏற்பாரா.

சிறிலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நான்கு விசேட கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

சமுர்த்தி மானியத்தை தொடர்வது, உர மானியத்தை தொடர்வது, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரவலாக்கப்பட்ட ஒதுக்கீட்டை மீள வழங்குவது, அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பின் போது வேலைவாய்ப்பை இழக்காதது போன்ற முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளன.

கட்சியின் செயலாளர் திரு. சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வறுமையை இல்லாதொழிப்பதற்கு சமுர்த்தி இயக்கமே சிறந்த பொறிமுறை எனவும் வேறு பெயர்களை கொண்டு அந்த இயக்கத்தை மாற்றுவது ஏற்புடையதல்ல எனவும் பொதுஜன பெரமுன அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், மானியங்களை மட்டுப்படுத்துதல் மற்றும் அரசாங்க சேவைகளை குறைத்தல் என்பன சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அடிப்படை ஒப்பந்தங்களாகும்.