வாஸ் கூஞ்ஞ)
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன் நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை இணைந்து நடாத்திய பிரதேச பண்பாட்டு பெருவிழாவும் கலைஞர்கள் சமூக ஆர்வலர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்வானது நானாட்டான் பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்றது.
இதில் வங்காலையைச் சேர்ந்த கலைஞர் திரு லாசர் அந்தோனி லெம்பேட் அவர்களுக்கு ‘செழுங்கலை வித்தகர்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் வங்காலை கிராமத்தில் 1942 இல் பிறந்தவர். இவர் வளர்கலை மன்றத்தில் இணைந்து கலைத் தொண்டாற்றியவர்.
இவர் ஒரு விவசாயியாக இருந்தாலும் கலையின் பால் மிகுந்த பற்றுக் கொண்டவர்.
பாஞ்சாலி சபதம் , இலங்கேசன் , வாலி வறை , தாவிது கோலியாற் மற்றும் ஈழம் கண்ட சோழன் போன்ற நாட்டுக்கூத்துகளில் பல பாத்திரமேற்று நடித்து தனது நடிப்புத் தன்மையை வெளிப்படுத்தியவர்.
இதையிட்டு இவருக்கு ‘செழுங்கலை வித்தகர்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதில் நானாட்டான் பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் பெருமிதம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.