நானாட்டான் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

(வாஸ் கூஞ்ஞ)

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம்  மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரனையுடன்  நானாட்டான் பிரதேச செயலகம் மற்றும் நானாட்டான் பிரதேச கலாச்சாரப் பேரவை இணைந்து நடாத்தும் பிரதேச பண்பாட்டு பெருவிழாவும்இ கலைஞர்கள் சமூக ஆர்வலர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நானாட்டான் பிரதேச செயலாளர் மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார்  அவர்களின் தலைமையில்  மிகவும் சிறப்பாக நடைபெற்றது

இந்த நிகழ்வானது நானாட்டான் பிரதேச செயலகத்தின் கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (3)  காலை 11.மணியளவில்   நடைபெற்றது

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளர் திரு.வேலாயுதம் சிவராஜா அவர்களும்இ சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை கல்வி அதிகாரியும்இ எழுத்தாளரும்இ ஆய்வாளருமான திரு எஸ்.டேவிட் அவர்களும் கௌரவ விருந்தினராக நானாட்டான் கோட்டக் கல்வி அதிகாரி திரு.தி.ஜெகநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்

இந்த நிகழ்வில் கலாச்சார பண்பாட்டு முறைப்படி அதிதிகள் பிரதேச செயலகத்தின் முன்றலில் இருந்து அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது

இதில் நாட்டுக் கூத்து  வில்லுப்பாட்டு உட்பட கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன்  பாடசாலை மட்டங்களில் நடாத்தப்பட்ட  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது

மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு அம்சமாக மூத்த கலைஞர்களும் வளர்ந்து வரும் கலை மற்றும் சமூகப் பணி ஆர்வலர்க்ககும்  விருதுகளும்இ சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டடார்கள். இதில் மன்னார் மாவட்டத்தில் வளர்ந்துவரும்  கலையிலும் மற்றும் சமூகப் பணியிலும் திகழ்ந்து வரும் எஸ்.ஜெகன் இந்த விருதுக்கு உரித்தானார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.