ஹஸ்பர்_
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் ஏற்பாட்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரனையின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளி குடும்பங்களில் உள்ள பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வானது இன்று (03) மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளை எவ்வாறு சுகாதாரம் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் மாற்றுதிறனாளி பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கு ஏற்படும் சவால்களுக்கு உளவள ஆலோசனை வழங்கியதுடன் எதிர்காலத்தில் சரியான முறையில் சுய தொழில் ஒன்றை எவ்வாறு தெரிவு செய்வது மற்றும் சரியான முதலீட்டு வழிமுறைகள் தொடர்பாகவும் வளவாளர்களினால் மிகவும் தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அங்கவீனமுற்ற தேசிய செயலகத்திலிருந்து சமூக சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கப்பல் துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்தியர்கள், சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட உளவள துணை உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.