கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2023 போட்டி முடிவுகள்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடா வருடம் நடத்தப்பட்டுவரும் கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2023 போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண இலக்கிய விழா போட்டி முடிவுகளின் படி, இலக்கியத்துக்கான வித்தகர் விருது கனகசூரியம் யோகானந்தன், மூத்ததம்பி மகாதேவன், மீராமுகைதீன் கமால்தீன், சாமித்தம்பி திருவேணிசங்கமம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.  ஆற்றுகைத் துறைக்காக திருமதி. ஆறுமுகம் பரமேஸ்வரி, திருமதி. நிர்மலா தம்பிராஜா, இராசையா கிருஸ்ணபிள்ளை ஆகியோருக்கும் முகம்மது இப்ராஹிம் ஜாபீர்மற்றும் தம்பிராஜா சகாதேவராஜா ஆகியோருக்கு பல்துறைப் பணிபக்காக வித்தகர் விருது வழங்கப்படுகிறது. அத்துடன், நாட்டாரியல் துறைக்காக மூத்ததம்பி யோகானந்தராசாவுக்கும், ஊடகத் துறைக்காக முகம்மட் பசீர் அப்துல் கையூம் வித்தகர் விருது பெறுகிறார்.

இளங்கலைஞர் விருதுகளை இலக்கியத்துறைக்காக முருகையா சதீஸ், ஜலீலா முஸம்மில், ரவீந்திரா ராகுலன், சுப்பிரமணியம் கார்த்திகேசு, திருமதி. ஜெனிதா பிரதீபன், ஆற்றுகைத் துறைக்கு ஆற்றிய சேவைக்காக சுந்தரலிங்கம் சந்திரகுமார், சஞ்ஜீவ் ராஜு, பல்துறைப் பணிக்காக ஆறுமுகம் தனுஸ்கரன், அப்துல் மஜீத் அஹமட் சாஜீத், நாட்டாரியல் துறைக்கு குணரத்தினம் சிந்தாத்துரை, ஊடகத்துறையில் வடிவேல் சக்திவேல், நுண்கலைத் துறையில் செல்வி. நடராசா டிசாந்தினி ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான பாடல் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் ஷாபிர்;, பட்டிருப்பு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ந. நேசகஜேந்திரன், குச்சவெளி பிரதேச செயலக கணக்காளர் அன்ரனிதாஸ் ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

அரச உத்தியோகத்தர்களுக்கான பாடல் போட்டியில் மண்டூர் சக்தி வித்தியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் தி. டினேஸ்குமார்;, மூதூர் பிரதேச சபை முகாமைத்துவ உதவியாளர் பு. ஜெயகரன்;, திருகோணமலை  கமநல திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. கவிதா தேவவிதுரன் ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

கலை மன்றங்களுக்கிடையிலான கலை இலக்கிய அறிவுப்போட்டியில் அக்கரைப்பற்று ஹல்லாஜ் இஸ்லாமிய கலை இலக்கிய மன்றம்;, கன்னங்குடா கண்ணகி கலைக்கழகம்;, தேத்தாத்தீவு தேனுகா கலைக்கழகம் ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர். இப்போட்டியில் அதிகூடிய புள்ளிகளை அக்கரைப்பற்று ஹல்லாஜ் இஸ்லாமிய கலை இலக்கிய மன்ற அப்துல் ரசாக் பெற்றுள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கான படைப்பாக்கப் போட்டியில் புதுக்கவிதை: கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மனோகரன் சசிப்பிரியன்;, சேருநுவர பிரதேச சபை ஜனாபா. முஹமது சியா பாத்திமா றொசானா, கல்முனை பிரதேச செயலக திருமதி. பரராஜசிங்கம் ரோமினி ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

மரபுக்கவிதை: கிண்ணியா அல்ஹிரா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜனாபா. சித்தி சபீனா வைத்துல்லா, திருகோணமலை  மெதடிஸ்த பெண்கள் கல்லூரி திருமதி. தமிழ்ச்செல்வி வசந்தகுமார், கல்முனை வடக்கு பிரதேச செயலகம் லோ.சேந்தன் ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

சிறுகதை: தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தின் திருமதி. கரண்யா பிரசாந்தன்,  கல்முனை பிரதேச செயலக ஜனாபா முஹமது மர்சூக் பாத்திமா சுஐமயா, சேருநுவர பிரதேச சபை ஜனாபா. முஹமது சியா பாத்திமா றொசானா ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

ஓவியம்: மண்டூர் விக்னேஸ்வரா வித்தியாலய பு.சிறிகாந்த,  வெல்லாவெளி பிரதேச செயலக ஐயாத்துரை பகலவன், மட்டக்களப்பு புகையிரத திணைக்கள இரத்தினசிங்கம் சிவகாந்தன் ஆகியோர் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

புகைப்படம்: அக்கரைப்பற்று மத்திய கல்லூரி முஹம்மது அபூபக்கர் றமீஸ் 1ஆம் இடம், குச்சவெளி பிரதேச செயலக ரொ.கன்யூட் றொட்றிகோ 2ஆம் இடம் பெற்றுள்ளனர்

கிழக்கு மாகாண இலக்கிய விழா போட்டியின் சிறந்த நூல்களுக்கான விருதுகள்,   தங்கராசா ஜீவராஜின் தம்பலகாமம் ஊர் பெயர் ஆய்வு என்ற நூலுக்காக  ஆய்வு சார் படைப்பு வகையில் விருது வழங்கப்படுகிறது.  புலமைத்துவ வகைக்காக இதயதாகமே இலக்கியம் என்ற செல்லத்துரை லோகராஜாவின் நூல், சுய புதுக்கவிதை வகையில் சிவபாதசுந்தரம் சுதாகரனின் கிடுகு வீடு நூல், மரபுக்கவிதை வகையில் சோ. இராசேந்திரம் (தாமரைத்தீவான்) (புதிய) பத்துப்பாட்டு நூல், கண்ணீரில் கரைந்த தேசம் எனும் முருகையா சதீஜின் சுயநாவல், திருமதி. கௌரி லக்சுமிகாந்தன் எழுதிய வரலாற்று நோக்கில் கிழக்கிலங்கை எனும் வரலாற்று நூல் ஆகியன விருது பெறுகின்றன.

அவற்றுடன், சுயசிறுகதை வகையில் திருமதி. அ. யோகராஜா(மண்டூர் அசோகா)வின் எழுதப்படாத கவிதைகள் நூல், நாடகமும் ஆய்வும் வகையில் சுந்தரலிங்கம் சந்திரகுமாரின் யதார்த்த நாடகவியல் இலக்கியமும் பகுப்பாய்வும் நூல்;, நாட்டுக்கூத்தும் – பிரதியாக்கமும் வகையில் சுந்தரப்பிள்ளை சிவரெத்தினம் எழுதிய மகிடிக் கூத்து நூல்;, இலக்கிய சஞ்சிகை வகையில் செய்னுல் ஆப்தீன் அப்துல் கப்பாரின் வெண்ணிலா (கவிதை மஞ்சரி) நூல், சமூகவிஞ்ஞானம் (ஆன்மீகம்) வகையில் மூ.அருளம்பலத்தின் பத்தாலய பாவாரங்கள் (பக்தியிலக்கியம்) நூல்,  சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேத மருத்துவம்) வகையில் அறிவும் ஆரோக்கியமும் என்ற வைத்தியர். ஆர். எப் றிஸ்மியாவின் நூல்;, அறிவியலும் தொழிநுட்பமும் வகையில்  இலங்கை அரசாங்கமும் அரசியலும் என்ற  ஆ. யோகராஜாவின் நூல் ஆகியவற்றுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.