வவுனியா பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக்கூட்டம்.

(அஸ்ஹர் இப்றாஹிம)   இவ்வருடத்திற்கான ஐந்தாவது  பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டம்  வவுனியா  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும்  பாராளுமன்ற  உறுப்பினருமான கெளரவ குலசிங்கம் திலீபன் அவர்களின் தலைமையில் கிராமியப் பொருளாதார இராஜாங்க  அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான   கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் பங்கேற்போடு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு. ஐ. பிரதாபன்  அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ்  இடம்பெற்றது.
சென்றமுறை நடைபெற்று முடிந்த பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட்டதுடன் மிக முக்கியமான விடயங்களும் இதன்போது ஆராயப்பட்டன.
குறித்த நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்களம் சார்ந்த பிரச்சினைகளும், விவசாய விரிவாக்கல், கல்வி,கூட்டுறவு, கால்நடை உற்பத்தி,  காணி மற்றும் சுகாதாரம் போன்ற முக்கியமான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில்   திணைக்கள தலைவர்கள்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.