(அஸ்ஹர் இப்றாஹிம்) மாவடிப்பள்ளி- காரைதீவு பிரதான வீதியிலிருந்து சாய்ந்தமருது பொலிவேரியன் வீடமைப்பு திட்டப்பகுதிக்கு கரைவாகு வட்டையினூடாக செல்லும் வீதி ஆரம்பிக்கும் இடத்திலுள்ள பாலத்தின் இரு பக்கங்களிலுமுள்ள பாதுகாப்பு தூண்கள் சேதமடைந்து பல மாதங்கள் கடந்தும் இதுவரை திருத்தப்படாமலுள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பாலத்தை சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடிக்கு செல்லும் பொதுமக்களும் விவசாயிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
தினசரி உழவு இயந்திரங்கள், மாட்டு வண்டிகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இப் பாதுகாப்பற்ற பாலத்தினூடாக பயணிப்பதால் பலவிதமான சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.