நீண்டகால போதைப் பொருள் கடத்தல் சந்தேக நபர் கைது.

( வாஸ் கூஞ்ஞ)  மன்னாரில் நீண்ட காலமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் வசமாக போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் மன்னார் தாரபுரம் கிராமத்துக்கு அருகாமையில் புதன்கிழமை (01) இரவு 9 மணியளவில் நடைபெற்றதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மன்னார் பொலிஸ் பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்போதே இச்சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

மன்னார் தாழ்வுப்பாடு பகுதியிலிருந்து தாராபுரத்துக்கு இப் போதைப் பொருளை கொண்டு வந்த வேளையிலேயே இந்நபர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

5150 போதைப் பொருள் மாத்திரைகளுடனே 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இப் போதைப் பொருள் மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரையில் தெரிய வந்தள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மாத்திரைகளையும் மேலதிக விசாரனைக்காக மன்னார் பொலிஸ் நிலையதத்pல் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.