கிண்ணியா  தள வைத்தியசாலை  கவனயீர்ப்பு போராட்டம்.

(ஹஸ்பர்)  கிண்ணியா தள வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் (01) காலை 7.00 முதல் 12:00 மணி வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலதிக நேர கொடுப்பணவு, ஆடைக் கொடுப்பணவு, சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கட்டணம் மின்சார கட்டணம் அதிகரித்துள்ளது ஆனால் எங்களுடைய சம்பளம் மட்டும் உயர்த்தப்படவில்லை
ஏனைய ஊழியர்களுக்கு போன்று எங்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.
மேற்படி பிரச்சினைகள்  இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 நோயாளர்கள்
இதேவேளை வைத்தியசாலைக்கு வந்த நோயாளர்கள் பலர் தமது வைத்திய தேவையை பெற்றுக் கொள்ளகொள்ள முடியாது  பல்வேறு அசெளகரிங்களை எதிர்நோக்கனர்.
தீவிர மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளையும், விசேடகிளினிக் பிரிவுகளையும் தவிர,
வெளி நோயாளர் பிரிவு உட்பட ஏனைய  பகுதிகளும் இயங்கவில்லை. இதனால் சிகிச்சை பெறுவதற்காக வந்த நோயாளர்கள்  சிகிச்சை பெற முடியாது திரும்பிச் சென்றனர்.
மிகத் தூர இடங்களில் இருந்து வந்த சிலர் 12:00 மணிக்கு பிறகு சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலையில் தரித்து நின்றனர்.
நாங்கள் தூரிடத்தில் இருந்து வருகின்றோம் எங்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக வேண்டிய நாங்கள் வைத்தியசாலைக்கு வந்தோம் ஆனால் இஸ்ரைக்காம் என்று சொல்கின்றார்கள் என தெரிவித்தனர்.