கல்முனை பிராந்திய தாய் சேய் நலப் பிரிவினால் போசனையை விருத்தி செய்யும் செயற்றிட்டம்.

 (எம். என்.எம்.அப்ராஸ்)    கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக தாய் சேய் நலப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எச்.ரிஸ்பின் அவர்களினால் தற்கால பொருளாதார நெருக்கடிகளை கவனத்தில் கொண்டு சிறுவர்களின் போசாக்கினை பேணுவதற்காகவும் போசனை மட்டத்தை அதிகரிப்பதற்காகவும் வைத்தியசாலைகள் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் பொது சுகாதார மாதுக்களுக்கான விசேட பயிற்சித்திட்டம் பணிமனையின் கேட்போர் கூடத்தில்(30)யுனிசெப் மற்றும் CERI கிட்ஸ் அமைப்பின் அனுசரணையுடன் இடம்பெற்றது.