பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மற்றும் கம்பியூட்டர் அறிவை வழங்க பெற்றார் முன்வரவேண்டும்.

(அபு அலா )  இன்று போட்டி நிறைந்த உலகில் வாழ்ந்து வருவதனால் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மற்றும் கம்பியூட்டர் அறிவை வழங்க பெற்றார் முன்வரவேண்டும். ஆங்கிலத்தில் எழுத, வாசிக்க, பேச ஒரு மனிதனால் முடியாவிட்டால் அவனால் எந்த விடயங்களையும் செய்யமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு ஆழாகிவிடுவான் என்று கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும் Metro Politan college தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
Royal Institute Sainthamaruth Awarding ceremony -2023 வருடாந்த பரிசளிப்பு விழாவும் மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் (29) சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வரும் Metro Politan college தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பெற்றோர்கள் கட்டாயம் ஆங்கில அறிவையும் கணிணி அறிவையும் உங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான களங்களை அமைத்துக்கொடுக்கும் பாடசாலைகளுக்கு அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள், தனவந்தர்கள் தங்களால் முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்க முன் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினர்.
குறிப்பாக, மாணவர்களை போதைப் பொருள் பாவனையின் பக்கம் ஈர்க்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது எமது பிரதேசங்களில் மட்டுமல்ல எல்லா பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றன. இத்திட்டத்தில் இன்றைய இளைஞர்களும், சிறுவர்களும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி விடுகின்றார்கள். அதிலிருந்து எமது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ளும் பாரிய பொறுப்பு பெற்றோர்களாகி உங்களிடமே உள்ளது என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
எமது பிள்ளைகளுக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்குங்கள். சாதாரண தரம் அல்லது உயர் தரம் சித்தியடையவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். அதற்கேற்றவாறு அவர்களை பயிற்றுவித்து டிப்ளோமா தொடக்கம் கலாநிதி வரை செல்லக்கூடிய கல்வியை வழங்கக்கூடிய அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களை நாங்கள் தலைநகரில் 25 வருடங்களாகவும் கல்முனையில் 05 வருடங்களாகவும் நடாத்திக்கொண்டு வருகின்றோம். அவற்றில் உங்கள் பிள்ளைகளை கற்கவைத்து அதன் மூலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.