நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் “அஸ்வெசும”  தகவல்களை சரிபார்க்கும் பணிகள் ஆரம்பம்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)  “அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் மேன்முறையீடு செய்தவர்களின் தகவல்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக மேன்முறையீடு செய்த பயனாளிகளில் தகுதியானவர்களை கண்டறிவதற்கான தகவல்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு மேன்முறையீடு செய்த பயனாளிகளில் தகுதியானவர்களை கண்டறிவதற்கான தகவல்களை சரிபார்க்கும் பணிகள்  நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் (31) முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ், நாவிதன்வெளி உதவிப் பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபைராஜா திலகராணி உட்பட கிராம மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.