துருக்கி நாட்டின் 100வது ஆண்டு  குடியரசு தினம்.

(அஷ்ரப் ஏ சமத்) துருக்கி நாட்டின் 100வது ஆண்டு  குடியரசு தினம்  இலங்கைக்கான  துருக்கித் துாதுவர் ஆர்.டிமெட் சேக்கொழுகு தலைமையில் நேற்று இரவு 30.10.2023 காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. 
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவும் கலந்து கொண்டு துருக்கி பற்றிய வாழ்த்துறைகளை ஆற்றினார்கள்  
 
இ்ங்கு உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ….
 
இன்று  முதல் தடவையாக துருக்கியின் தலைநரகமாக ஸ்டோன்புலிருந்து  கொழும்புக்கு நேரடி துருக்கி விமான சேவை ஒன்று ஆரமபிக்கப்பட்டிருந்தது. அவ் விமானத்தில் வரு 265க்கும் மேற்பட்ட துருக்கி சுற்றுலா பிரயாணிகள் கொழும்பை வந்தடைந்துள்ளனர் இதனால் இலங்கை -துருக்கி சுற்றுலாத்துறை மேலும் விருத்தியடையும். . கடந்த சுனாமி இயற்கை அனர்த்த  காலத்தில்   கிழக்கில் துருக்கி 100 விடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது.அத்துடன் துருக்கிய சுகாதாரத்துறையினர் இங்கு தங்கி நின்றுஇங்கு உள்ள மக்களுக்கு சிகிச்யையளித்தனர். அத்துடன் இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள், மற்றும் உயர் மாணவர்களுக்கு உயர்கல்விக்காக  புலமைப்பரிசில் ்திட்டங்களை வழங்கி வருகின்றது.
 அன்மையில் இலங்கையின் விவசாயிகளின் நன்மை கருதி நீர்ப்பாணசத்திட்டமொன்றுக்கு உதவி வழங்கியுள்ளது. துருக்கி – இலங்கை இரு நாட்டு வர்த்தகளம் மற்றும் கட்்டிட நிர்மாணம் , போன்றவற்றிலும் பங்கெடுத்துள்ளது.  ஜக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீன் நாட்டின் வாக்கெடுப்பின் போது பலஸ்தீன் நாட்டுக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பலஸ்தீன் பிரச்சினையில் தீர்ப்ப்தில் துருக்கி செயற்பட்டுவருவதையும் கல்வியமைச்சர் அங்கு நினைவு கூர்ந்தார்
 
அத்துடன் வருகைதந்த பிரமுகர்களின் அழைப்பிதழின் ஊடாக குழுக்கள் முறையில்தேர்ந்தெடுத்த  5 அதிர்ஸ்டசாலிகளுக்கு அந் நாட்டுக்கு செல்வதற்கு விமானச் சீட்டும் வழங்கப்பட்டது.  இம்தியாஸ் பாக்கீர் மாக்காரும் இக்குழுவில் தெரிபு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  
 
இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும்  வெளிநாட்டு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரனி அலி சப்ரி, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, இாஜாங்க அமைச்சர் அரவிந்தக் குமார், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட் பாராளுமன்ற உறுப்பிணர்கள் , வெளிநாட்டுத் துாதுவர்கள் கொழும்பில் உள்ள துருக்கி நாட்வர்கள், உட்பட் பலரும் கலந்து சிறப்பித்தனார்.