( வி.ரி.சகாதேவராஜா) கடந்த நான்கு நாட்கள் பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்த காரணமாக திருகோணமலையிலுள்ள கன்னியா வெந்நீர் ஊற்று சுற்றுலா பயணிகளால் களை கட்டிவருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வெந்நீர் நீராடலில் ஈடுபட்டு வருகின்றார்கள் .
கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91/92 அணியினரும் அந்த நீராடலில் கலந்து கொண்டு மகிழ்ந்து திளைத்தார்கள் .
இராவணன் தனது தாயாருக்காக பிதிர்க்கடன் செலுத்த இதனை விரல்களை ஊன்றி ஏழு இடங்களில் ஏழு வெந்நீர் ஊற்றுகளை உருவாக்கியதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
காலை 7 மணி அளவில் அங்கு பிரதான வாயில் திறக்கப்படுகிறது .
அந்த நிமிடத்தில் இருந்து தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கில் பயணம் செய்து அங்கு தொல் பொருள் திணைக்கள அலுவலகத்தில் 50 ரூபாய்( உள்ளூர் பயணிகள்) செலுத்தி அனுமதிச் சீட்டு பெற்று நீராடி மகிழ்ந்து வருகின்றார்கள்.