எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (30.10.2023) பிற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்தே இதனை கூறியுள்ளார்.
மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பின்னணியில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.