மன்னாரில் கட்டுக்கரைக்குளத்தில் நீர் இன்மையால் நெற்செய்கை விதைப்பு பின்தள்ளப்பட்டுள்ளது.

(வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் கட்டு;டுக்கரைக் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் 2023 – 2024 ம் ஆண்டு காலபோக றெ;செய்கையானது கட்டுக்கரை குளத்தில் நீர் இன்மையால் காலம் தாழ்த்தியே நெற் செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான குளமாக விளங்கும் கட்டுக்கரைக் குளத்திட்டத்தின் கீழான பெரும்போக பயிர்ச் செய்கைக் குழுக்கூட்டம் வெள்ளிக்கிழமை (27) உயிலங்குளத்தில் மன்னார் மேலதிக மாவட்டச் செயலாளர் ய.பரந்தாமன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்டுக்கரைக்குளத்தின் கீழான 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்ச் செய்கை முன்னோடிக் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டது.

விவசாயம் செய்யக்கூடிய இடம் விஸ்தீரணம் மற்றும் நீரின் கொள்வனவு பற்றி ஆராயப்பட்டது.

இக் குளத்தின் கிழு; தெரிந்தெடுக்கப்;பட வேண்டிய வாய்க்கால்கள் அவற்றின் விஸ்தீரணம்

பயிர்ச் செய்கையின் அட்டவணை , விதைநெல் , பசளை விநியோகம் , அடாத்துப் பயிர்செய்கை , கால்நடை கட்டுப்பாடு , காப்புறுதி மற்றும்  வங்கி கடன் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி வாய்க்கால் துப்பரவு மற்றும் பராமரித்தல் இறுதி திகதி 05.11.2023

முதல் நீர் விநியோகம் 10.11.2023 , இரண்டரை மற்றும் மூன்றரை மாத நெல் இனமே விதைக்க வேண்டும்.

இதன் இறுதி விதைப்பு 30.11.2023 , கால்நடைகளை கட்டும் இறுதி திகதி 30.10.2023 காப்புறுதி செய்ய வேண்டிய இறுதி திகதி 30.11.2023. முதல் தண்ணீர் விநியோகம் 01.12.2023. இறுதித் தண்ணீர் விநியோகம் 28.02.2024

அறுவடை ஆரம்பத் திகதி 15.03.2024 அறுவடை இறுதி திகதி 15.04.2024 கால்நடைகளை அவிழக்கும் திகதி 22.04.2024 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.