கலைகளில் பயிற்சிகளைப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் நிகழ்வு

(ஏறாவூர் நிருபர்)

அழகுக்கலை, தையல், மருதாணி மற்றும் கேக் தயாரிப்பு போன்ற கலைகளில் பயிற்சிகளைப் பூர்த்திசெய்துள்ள சுமார் என்பது யுவதிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கண்டி- கம்பளையில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு ஏறாவூர் முன்னா பியூட்டி எக்கடெமியில் இந்த யுவதிகள் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்தவர்களாவர்.

கம்பளை நகர சபையின் முன்னாள் முதல்வர் சமந்த அருண குமார இந்நிகழ்வில்; பிரதம அதிதியாகக்கலந்துகொண்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் முகமட் பிர்தௌஸ் நிகழ்வில் விசேட அதிதியாகக்கலந்துகொண்டார்.

அழகுக்கலை கலைஞரான ஆயிஷா முனவ்வர், சமூக செயற்பாட்டாளர்களான பைறூசா றாசிக், நஸீறா கபூர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் அப்துல் நாஸர் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

கம்பளை அல் ஹிக்மா முன்பள்ளி சிறுவர்களது கலை நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டன. கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் புத்தளம், திருகோணமலை, அம்பாறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப்பகுதிகளையும் சேர்ந்த யுவதிகள் நேரடியாகவும் சூம் தொழில் நுட்பம் வாயிலாகவும் பயிற்சிகளில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கட்டார், குவைத், துபாய், இந்தியா மற்றும் மலேஷியா போன்ற நாடுகளில் தங்கிவாழ்பவர்களும் இந்த நிறுவனத்தில் பயிற்சிகளைப்பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வின்போது அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பயிற்சிகளைப் பூர்த்திசெய்துள்ள யுவதிகள் தமது ஆசிரியைக்கு நினைவுச்சின்னம் வழங்கினர்.