இனவன்முறைகளை தூண்டும் விதமாக பேசிய தேரருக்கு எதிராக மட்டக்களப்பிலும் முறைப்பாடு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌத்த துறவியான அம்பிட்டிய தேரர் அவர்கள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்களுக்கிடையே ஒற்றுமையினை சீர்குலைக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருவதுடன் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

அதன்அடிப்படையில் அம்பிட்டிய தேரர் அவர்கள் தமிழர்கள் மீதான இனவன்முறைகளை தூண்டும் விதமாக பேசிய விடயத்தை தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களால் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.