(அ . அச்சுதன்)
“உலக போலியோ தினம் 2023” திருகோணமலை ரோட்டரி கழகத்தால் நினைவு கூறப்பட்ட்து
திருகோணமலை ரோட்டரி கழகம் சார்பில் “உலக போலியோ தினம் 2023”, திருகோணமலை மாதுமை அம்பாள் தமிழ் வித்தியாலய மாணவர்கள் மத்தியில் 26-10-2023 அன்று நினைவு கூறப்பட்ட்து.
2023 ஆம் ஆண்டு உலக போலியோ தினத்தின் கருப்பொருள் – “தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்”
உலக போலியோ நிலைமை மற்றும் சர்வதேச ரோட்டரி கழகத்தின் போலியோவை உலகில் இருந்து நீக்குவதற்கான செயல் பற்றிய முக்கிய விபரங்களை டாக்டர் ஞானகுணாளன் வழங்கினார். அத்துடன் இலங்கையில் இருந்து எவ்வாறு போலியோ நோய் ஒழிக்கப் பட்ட விதத்தையும் எடுத்துக் கூறினார்
சர்வதேச ரோட்டரி கழகத்தின் போலியோவை உலகில் இருந்து நீக்குவதற்கான செயல் பற்றிய முக்கிய விபரங்களை மாணவர்கள் கேட்டு அறிந்து கொண்டார்கள்.