பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள் திறந்து வைக்கப்பட்டன

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரிய கல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள் புதன்கிழமை காலை 8 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.

கடந்த சுனாமி அனர்த்தத்தின் போது முழுமையாக சேதமடைந்த குறித்த பாடசாலை 2005ஆம் ஆண்டில் ரோட்டரிக் கழகத்தினால் மீளப் புனரமைக்கப்பட்ட நிலையில் கட்டடத்தின் கூரைகள் யாவும் காலப்போக்கில் சிதைவடைந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினருக்கு பாடசாலைச் சமூகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட வகுப்பறைகள், மலசல கூடங்கள் ,சுற்றுமதில் என்பன உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டன.

வித்தியாலயத்தின் முதல்வர் திரு தங்கராசா சசிகாந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமெரிக்காவினை நிரந்த வதிவிடமாகக் கொண்ட சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பொருளாளர்.முரளிதரன் இராமலிங்கம் மற்றும் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி பொறியியலாளர் ஹென்றி மற்றும் திட்ட இணைப்பாளர் பிரதீப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எஸ்.கணேசலிங்கம் அமைப்பின் பௌதீக வளங்களுக்குப் பொறுப்பானவரும் பாடசாலையின் சிரேஷ்ர ஆசிரியருமான ஜே.மேவின் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள்,நலன் விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.