பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் நவராத்திரி விழா

மண்முனை தென்மேற்கு  பிரதேச செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை நவராத்திரி விழா பூசை நிகழ்வுகள் நடைபெற்றன.

கல்வி, செல்வம், வீரம் என சகல சௌபாக்கியங்களும் பெறவேண்டி பிரதேச செயலக  ஸ்ரீ சர்வ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இவ்விழா இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி தெட்சண கௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலகத்தின் பிரிவு ரீதியாக பூஜைக்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.